செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

செந்தமிழ்க் கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா


நன்றி: தமிழ் முரசு 06-12-2013
நன்றி: மாலை மலர் 06-12-2013

நன்றி: மாலை முரசு 06-12-2013
      செந்தமிழ்க் கல்லூரியில்,மதுரை நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத் திறப்பு விழா டிசம்பர் 6 வெள்ளிக்கிழமை 2013 அன்று காலை நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சரும்,மதுரை நாடாளுமன்ற்த் தொகுதி உறுப்பினருமாகிய மாண்புமிகு மு.க.அழகிரி எம்.பி அவர்கள் செந்தமிழ்க் கல்லூரியில் புதிய கூடுதல் வகுப்பறைகளைத்  திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை,எம்.ஏ.,எம்ஃபில்.,அவர்கள் முன்னிலை வகித்தார். செந்தமிழ்க் கல்லூரித் தலைவர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ,மாணவியர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர்(பொ)முனைவர் மு.மீனா அவர்கள் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்தவர்களை கனிவுடன் வரவேற்றார்.
நன்றி : தினமணி 07-12-2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக