செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

ஞாயிறு, 24 நவம்பர், 2013

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் கமபராமாயண ஆய்வரங்கம்




மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில்
மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் கமபராமாயண ஆய்வரங்கம் தொடக்க விழா 19-10-2013 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. மதுரை செந்தமிழ்க் கல்லூரியும் காரைக்குடி கம்பன் தமிழ் ஆய்வு மையமும் இணைந்து  கம்பனில் புத்தம் புதிய (திறனாய்வுக்) கலைகள்என்னும் தலைப்பில் மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் 19-10-2013 அன்று மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத்தேவர் அருள்  வளாகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கின் இரு அமர்வுகளில் எட்டு ஆய்வுக் கட்டுரைகள் நிகழ்த்தப் பெற்றன. ஆய்வரங்கத்திற்கு வருகைபுரிந்த அனைவரையும் செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்(பொ) மு.மீனா அவர்கள் இன்முகத்துடன் வரவேற்புரை வழங்கினார்.. இவ்விழாவிற்குத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத்  தலைவரும், செந்தமிழ்க்கல்லூரிச் செயலருமாகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி அவர்கள் தலைமை உரையாற்றினார். மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்களும், செந்தமிழ்க் கல்லூரித் தலைவர் திருமிகு  சு.வீரணசாமி பி.எஸ்சி.,பி.எல்., அவர்களும், முன்னிலை வகித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் மற்றும் செந்தமிழ்க்
 
நன்றி : தினமணி நாளிதழ்
கல்லூரி மாணவர்களுக்கு கம்பராமாயணப் பெருமைகளை முன்னிறுத்தியும், கம்பராமாயணக் கருப்பொருளின் முக்கியத்துவம் பற்றிக்  கூறியும்  சிறந்ததொரு உரையாற்றினார்கள்.  மதுரைத் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திருமிகு க.முத்தையாபசும்பொன் அவர்கள் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு கம்பராமாயணத்தின் மேன்மையையும் சிறப்பினையும் வலியுறுத்தி சிறந்ததொரு வாழ்த்துரை நல்கினார். செந்தமிழ்க்கல்லூரித் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் அ.ந்ந்தினி, நன்றியுரை வழங்கினார்.


முதல் அமர்வில் தன் தலைமை உரையுடன் திருமிகு கம்பன் அடிசூடிதிருமிகு பழ.பழனியப்பன் அவர்கள் இறையியல் நோக்கில் கம்பன் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து, சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் கல்லூரித் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் பழ.பழனியப்பன் அவர்கள் ‘அழகியல் நோக்கில் கம்பன் மதுரை அருள்மிகு மீனாட்சி மகளிர் கல்லூரித் த்மிழ் இணைப்பேராசிரியர் முனைவர் யாழ்.சு.சந்திரா அவர்கள் செவ்வியல் நோக்கில் கம்பன் சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் கல்லூரித் தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் அ.பாண்டி அவர்கள் குறியீட்டியல் நோக்கில் கம்பன் ஆகிய தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினார்கள். செந்தமிழ்க்கல்லூரித் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் பி.ஆறுமுகம் முதல் அமர்விற்கு முறையாக நன்றியுரை வழங்கினார்.

பிற்பகல் 2.00 மணிக்குத் துவங்கிய இரண்டாம் அமர்வில் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் கல்லூரித் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் சொ.சேதுபதி அவர்கள் ‘கம்பனில் கல்வியியல்’, திருவேடகம் விவேகானந்த கல்லூரித் கல்லூரித் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் மு.முத்தையா அவர்கள் கம்பனில் மரபியல்’,  செந்தமிழ்க் கல்லூரித் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் கோ.சுப்புலட்சுமி அவர்கள் கம்பனில் உயிரியல்’, திண்டுக்கல் எம்.வி.எம்.கல்லூரித் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் க.நாகநந்தினி அவர்கள் கம்பனில் பறவையியல்’, ஆகிய தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார்கள். செந்தமிழ்க் கல்லூரித் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் பா.நேருஜி அவர்கள் இரண்டாம் அமர்விற்கு முறையாக நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக