செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

திங்கள், 9 டிசம்பர், 2013

குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும்



மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க்கல்லூரியில்குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும்
பயிலரங்கம்
அழைப்பிதழ்
 குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும்





மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் உள்ள வள்ளல் பொன்.பாண்டித்துரை ஆய்வுக் கருத்தரங்க அறையில் 11-12-2013  புதன் கிழமை குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும்என்னும் தலைப்பில் சிறப்புப் பயிலரங்கு நடைபெற்றது. மதுரை செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கச் செயலாளர் இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்தார். செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் மு.மீனா அவர்கள் வாழ்த்துரை நல்கினார். கவிஞர் ஜோவி (கவிப்பிரியன் ஜோ.இன்பெண்ட் விஜய் அமிர்த விக்டர்) குறும்பட்த் தயாரிப்பாளர்,சென்னை அவர்கள் குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும் என்னும் தலைப்பில் பயிலரங்கினை நடத்தினார். மாணவர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு பயனுற்றனர்.செந்தமிழ்க் கல்லூரித் தமிழ் உதவிப் பேராசிரியர் திரு.மு.செந்தில்குமார் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக