செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

புதன், 11 டிசம்பர், 2013

மனித உரிமைகள் தினம் உறுதிமொழி எடுத்தல் - செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில்



மனித உரிமைகள் தினம் உறுதிமொழி எடுத்தல்


10-12-2013 செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரியில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி எடுத்தல் நடைபெற்றது.

செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை,எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர்(பொ)முனைவர் மு.மீனா அவர்கள் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி உரையினை வழங்கினார். செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டு மனித உரிமைகள் தினம் உரையினைக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக