செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வெள்ளி, 30 மார்ச், 2012

செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா


செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா

செந்தமிழ்க் கல்லூரியில்
முப்பெரும் விழாவை தீப ஒளியேற்றித் தொடங்கி வைத்தல்
       செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர்  மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்
 கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்           செந்தமிழ்க்கல்லூரி முதன்மையர்
கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தீப ஒளி ஏற்றுதல் 
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 
              மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையாளர்                   செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர்        
மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்
கல்லூரி முதன்மையர் 
 செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்

   செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் முப்பெரும் விழாவில் தீப ஒளி ஏற்றுதல்

 செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா - தமிழ்த்தாய் வாழ்த்து
செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் 
                மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையாளர்                            
கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்
செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர்
மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்


2011-2012 -ஆம் கல்வி ஆண்டில் செந்தமிழ்க்கல்லூரி
29-03-2012 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2-30 மணியளவில் செந்தமிழ்க்கல்லூரியின் 55-ஆவது கல்லூரி ஆண்டு விழா,விளையாட்டு விழா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட விழா என முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர் மற்றும் அனைத்துத் தமிழகத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு இரா.கோச்சடை குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் திருமதி கோ.மு.பொன்னாத்தாள் எம்.எஸ்சி.,எம்ஃபில்., அவர்கள்  மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையாளர் திருமிகு.கணேசன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா வரவேற்புரை வழங்கினார்.
செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா-அழைப்பிதழ்
 செந்தமிழ்க்கல்லூரியில் நடைபெற்ற  வரலாற்றுச் சிறப்புமிகு முப்பெரும் விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தமிழ்ப்பணியாற்றி வரும் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயல்முறைகளிலும் செந்தமிழ்க்கல்லூரியின் வளர்ச்சிப் பணிகளிலும் அயராது பாடுபட்டு வரும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தமிழ்ப்பண்பாட்டின் விளைநிலமாகச் செழுமை பெற்றுத் திகழும் மாணவர்கட்குப் பாராட்டும் வாழ்த்துரையும் நல்க வருகை புரிந்த மதுரைத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள், செந்தமிழ்க் கல்லூரியின் கல்விக்குழு உறுப்பினர்கள்,
முதல்வரின் தோளோடு தோள் நின்று, அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கி, ஒத்துழைப்பு நல்கி, செந்தமிழ்க்கல்லூரியின் வளர்ச்சியில் அடுத்த கட்ட நிலைக்குக் கொண்டு செல்வதற்குத் தயார் நிலையில், தமிழ்ப்பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியப் பெருமக்கள், அலுவலக நிர்வாகிகள், செந்தமிழ்க்கல்லூரியின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புச் சேர்க்க வருகை புரிந்துள்ள, தமிழ்ச் சான்றோர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், 
 செந்தமிழ்க்கல்லூரி முதல்வரும், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும் கல்லூரி வளர்ச்சித் திட்டம் குறித்து உரையாடல்

மேலும்,பல்வேறு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் இருந்து வருகை புரிந்துள்ள புகைப்படக்கலைஞர்கள், செய்தி ஆசிரியர்கள், ஊடகப் பிரதிநிதிகள்,
தமிழர் தம் தனித்துவத்தை அடையாளங் காண, தமிழ் இலக்கிய இலக்கணம் கண்டறிந்து, தமிழர் தம் மதிப்புகளை, செந்தமிழ்க்கல்லூரி என்னும் வாழ்க்கைப் பயிற்சி நிறுவனத்தில் இருந்து பெற்றுச் செல்லும் என் அன்புக்குரிய மாணவச் செல்வங்கள் என்று முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு எங்களைப் பெருமைப் படுத்தியுள்ள நற்றமிழ் அறிஞர் பெருமக்கள் அனைவரையும் என் இரு கரம் கூப்பி, என் வணக்கத்தையும், வரவேற்பினையும் கூறிக் கொள்ளும் இவ்வேளையில், உங்களை இத்தமிழ்க் கோயிலின் சார்பில் வருக வருக என வரவேற்பதில் உள்ளம் பூரிப்படைகின்றேன். இத்தகு மகிழ்வான தருணத்தில் செந்தமிழ்க்கல்லூரியின் தமிழ்ப்பணி வரலாற்றில் முதல் பெண் முதல்வர் என்ற பெருமிதத்துடன் முனைவர் மு.மீனா அவர்கள் 55 ஆவது ஆண்டின் நிகழ்வறிக்கையினை வழங்குவதில் பேருவகை கொள்கின்றேன் எனக்கூறி 2011-2012 ஆம் கல்வியாண்டின் ஆண்டறிக்கையினை வாசித்தார்.

 தொடர்ந்து, தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்பையும் தமிழ் கூறும் நல்லுலகில் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், எல்லார்க்கும் தமிழின் மேன்மையை அடையச் செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடனும் வள்ளல்.பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை 1901-இல் நிறுவினார்கள்இதன் பல்வேறு தொலை நோக்குச் செயல்பாடுகளில் ஒன்று தமிழ்க்கல்லூரியினைத் தொடங்கித் தமிழைச் செழிக்கச் செய்ய வேண்டும் என்பதாகும்இக்கருத்தினை அடியொற்றி, 1956-இல் மதுரைத் தமிழ்ச் சங்கச் செயற்குழுவினரின் சீரிய முயற்சியால் செந்தமிழ்க் கல்லூரி 10.07.1957-இல் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படைக் குறிக்கோளினை நிறைவேற்றி வரும் செயல்பாடுகளையும் செயல்திட்டங்களையும் முதல்வர் எடுத்துரைத்தார்.
மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையாளர் திருமிகு.கணேசன் அவர்கள்

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் திருமதி கோ.மு.பொன்னாத்தாள் எம்.எஸ்சி.,எம்ஃபில்., அவர்கள், தங்கள் உரையில் தமிழின் மேன்மையை மையப்பொருளாகக் கொண்டு செந்தமிழ்க்கல்லூரியின் தனித்துவமும், தமிழ்ப்பணியாற்றிக் கொண்டிருக்கும் பெருமையும் பாராட்டத்தக்கது எனக்குறிப்பிட்டார். மேலும், நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் குழ்ந்தைகளுக்குத் தமிழில் பெயரினைச் சூட்ட வேண்டும். இத்தகைய சிந்தனை தமிழர்களாகிய நம்மிடம் உருவாக வேண்டும். தமிழில் அழகான பெயர்களை உருவாக்கி அல்லது இலக்கியங்களில் இருந்து அழகிய பெயர்களைத் தொகுத்து இனறைய த்லைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பது தமிழின் பெருமையை உணர வழிவகுக்கும் எனக் கூறினார். மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையாளர் திருமிகு.கணேசன் அவர்கள், மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
 விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள் வாழ்த்துரை நல்கினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையா ப்சும்பொன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
  தினமலர் நாளிதழுக்கு நன்றி-
 செந்தமிழ்க்கல்லூரியின் 55-ஆவது கல்லூரி ஆண்டு விழா,விளையாட்டு விழா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட விழா என முப்பெரும் விழாக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்துத் தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி



சிறப்பு விருந்தினர் மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் திருமதி கோ.மு.பொன்னாத்தாள் எம்.எஸ்சி.,எம்ஃபில்., அவர்கள்,உரையாற்றுகிறார்
 -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக