முன்னாள் மாணவர் நூல் வெளியீட்டு விழா
நிகழ்ச்சி நிரல்
நிகழ்ச்சி நிரல்
நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகள்
11-12-2013
புதன்கிழமையன்று காலை 11 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன்.
பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்
கல்லூரியில் 2007-2010 ஆம் கல்வியாண்டுகளில் இளங்கலைத் தமிழ் (பி.ஏ.,) பயின்ற
முன்னாள் மாணவர் ஜோவி அவர்கள் எழுதிய ”பாதை காட்டும்
செங்குருதி” என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. செந்தமிழ்க்
கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்
திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்து நூலினை வெளியிட்டார். மதுரை நான்காம்
தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை,எம்.ஏ.,எம்ஃபில்.,அவர்கள் முன்னிலை வகித்து நூலின் முதல்
பிரதியைப் பெற்றுக் கொண்டார். கல்லூரி முதல்வர்(பொ), முனைவர் மு.மீனா அவர்கள் நூல் மதிப்புரை
வழங்கினார். செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ,மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பின்னர்,குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும் பற்றித் தமிழ் பயிலும் மாணவர்கட்குப்
பயிலரங்கினை நடத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக