மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க்கல்லூரியில்”சித்தர் இலக்கியத்தில் வாழ்வியல் நெறிகள்”
அழைப்பிதழ் |
மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில்
உள்ள வள்ளல் பொன்.பாண்டித்துரை ஆய்வுக் கருத்தரங்க அறையில் 09-12-2013 திங்கட் கிழமை ”சித்தர் இலக்கியத்தில்
வாழ்வியல் நெறிகள்” என்னும் தலைப்பில் சிறப்புச்
சொற்பொழிவு நடைபெற்றது. மதுரை செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை
இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கம் செயலாளர் இரா.அழகுமலை
எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்தார். செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்
முனைவர் மு.மீனா அவர்கள் வாழ்த்துரை நல்கினார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்
தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இளமதி ஜானகிராமன் அவர்கள் ”சித்தர் இலக்கியத்தில்
வாழ்வியல் நெறிகள்” என்னும் தலைப்பில் சிறப்புச்
சொற்பொழிவினை ஆற்றினார். மாணவர்கள் அனைவரும் திரளாக்க் கலந்து கொண்டு சித்தர்களின்
இலக்கியங்களில் காணக்கிடக்கின்ற வாழ்வியல் உண்மைகளை அறிந்து மகிழ்ந்தனர். செந்தமிழ்க்கல்லூரித்
தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் அ.நந்தினி நன்றியுரை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக