செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வெள்ளி, 11 ஜனவரி, 2013

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் தேவார இசைப் பயிற்சி



மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில்
மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் தேவார இசைப் பயிலரங்கம் தொடக்க விழா 26-09-2012 புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி-இசைக்கல்வி அறக்கட்டளையும் செந்தமிழ்க்கல்லூரியும் இணைந்து  தமிழ்ப் பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட மாணவர்கட்குத் மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 26-09-2012 முதல் 28-09-2012 வரை மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத்தேவர் அருள்  வளாகத்தில் நடைபெற்றது.  
தேவார இசைப் பயிலரங்கம் தொடக்க விழா அழைப்பிதழ்
 இசைப்பயிலரங்கத்திற்கு வருகைபுரிந்த அனைவரையும் தேவார இசை ஆசிரியர் கலைமாமணி முனைவர் தி.சுரேஷ் சிவன் அவர்கள் இன்முகத்துடன் வரவேற்றார். இவ்விழாவிற்குத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத்  தலைவரும், செந்தமிழ்க்கல்லூரிச் செயலருமாகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி அவர்கள் தலைமை உரையாற்றினார். மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் மற்றும் செந்தமிழ்க்கல்லூரி மாணவர்களுக்கு இசைப் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றிக்  கூறி சிறந்ததொரு உரையாற்றினார்.  செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்(பொ) மு.மீனா அவர்கள் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இசையறிவின் மேன்மையையும் சிறப்பினையும் வலியுறுத்தி சிறந்ததொரு வாழ்த்துரை நல்கினார்.திருமதி.ஜெயந்தி நாகராஜன்,தமிழ் உதவிப் பேராசிரியர் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக