செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

புதன், 15 ஆகஸ்ட், 2012

66-ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்



மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 
66 ஆவது சுதந்திர தின விழா 
சுதந்திர தின விழா அழைப்பிதழ்
மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 66 ஆவது இந்திய சுதந்திர தின விழா 15-08-2012 புதன்கிழமை காலை 09 மணியளவில் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியின் முதல்வர்(பொ) மு.மீனா அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தேசியக் கொடியினையேற்றினார்கள். தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் இந்நிகழ்விற்குத்  தலைமை வகித்தார்கள். செந்தமிழ்க்கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர்கள் திருமிகு க.முத்தையாபசும்பொன், வழக்கறிஞர், அவர்கள், திருமிகு சு.வீரணசாமி வழக்கறிஞர், அவர்கள், முனைவர் க.சின்னப்பா, முதன்மையர், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும்பலர் திரளாகக் கலந்து கொண்டனர். செந்தமிழ்க்கல்லூரி மாணவர்களின் இனிய கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. செந்தமிழ்க்கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக