மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த
செவ்வியல் ஆய்வுகள் - தேசியக் கருத்தரங்கம்
செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனமும் மதுரை செந்தமிழ்க்கல்லூரியும் இணைந்து ”செந்தமிழ் இதழில்
வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள்” என்னும் தலைப்பில் மூன்று நாட்கள் (31-01-2013
முதல் 02-02-2013 வரை) நடைபெறும் தேசியக் கருத்தரங்கின் துவக்க விழா
வெகுவிமரிசையாக நடைபெற்றது. 31-01-2013 வியாழக்கிழமையன்று காலை 10 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி
வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் நடைபெற்றது.
செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார்.
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை>எம்.ஏ.>எம்ஃபில்.> அவர்கள் முன்னிலை வகித்தார். செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ,மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வரும்(பொ), கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் மு.மீனா கருத்தரங்கின் மைய உரையினை வழங்கினார்.
தினமணி நாளிதழ் |
சென்னை செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனம் இலக்கியத்துறை முதுநிலை ஆய்வறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக
முன்னாள் துனைவேந்தருமான முனைவர் இ.சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். உலகத்
திருக்குறள் பேரவைப் பொதுச்செயலாளர் ந.மணிமொழியன் வாழ்த்துரை வழங்கினார்.
இத்தேசியக்கருத்தரங்கில் 27 அறிஞர்கள் செந்தமிழ்
இதழ் குறித்து பல்வேறு தலைப்புக்களில் மேலாய்வு செய்து தம் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். தமிழகத்தைச்
சேர்ந்த பல்வேறு கல்லூரிப் பேராசிரியர்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், முதுகலை,இளம் ஆய்வுப் பட்ட மாணவர்களும், முனைவர் பட்ட மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அமர்வு-2 இல், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ் இணைப் பேராசிரியர் (ஓய்வு) முனைவர் இந்திரா மனுவல் அவர்கள், ”செந்தமிழ் இதழில் சேரநாட்டுத் தமிழ் அறிஞர்களின் ஆய்வுகள்” என்னும் தலைப்பில் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் பல வரலாற்றுத் தரவுகள் அடங்கியுள்ளமையை எடுத்துக்கூறி ஆய்வுக் கட்டுரை வழங்கினார்.
மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் – தேசியக் கருத்தரங்கம்
முதல் நாள் கருத்தரங்க நிகழ்வுகள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய
நிறுவனமும் மதுரை செந்தமிழ்க்கல்லூரியும் இணைந்து ”செந்தமிழ் இதழில் வெளிவந்த
செவ்வியல் ஆய்வுகள்”
என்னும் தலைப்பில் மூன்று நாட்கள் (31-01-2013 முதல் 02-02-2013 வரை) நடைபெறும்
தேசியக் கருத்தரங்கின் முதல் நாள் அமர்வுகள் 31-01-2013 வியாழக்கிழமை காலை 11.30
மணிக்குத் துவக்க விழா நிகழ்விற்குப் பின்னர் தொடங்கியது. இந்நிகழ்வுகளைக் கல்லூரி முதல்வரும் (பொ), கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர்
மு.மீனா அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ் உதவிப்பேராசிரியை
திருமதி.ஜெயந்திநாகராஜன் அமர்வுப் பொறுப்பாளாராகச் செயல்பட்டார்.
அமர்வு-1 இல், சிவகங்கை மன்னர்
துரைசிங்கம் கல்லூரி, தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன்
அவர்கள், செந்தமிழ் இதழில் “நற்றிணை அரசப் புலவர்களின் ஆய்வுரைகள்” என்னும் தலைப்பில் கட்டுரை
வழங்கினார்.
தொடர்ந்து, செந்தமிழ் இதழ்ப்பணி குறித்து மதுரை திருப்பாலை யாதவர்
ஆடவர் கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர்
முனைவர் வீ.கோபால் ”செந்தமிழ் இதழின் தமிழ்ப்பணி” என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.
முனைவர் வீ.கோபால் ”செந்தமிழ் இதழின் தமிழ்ப்பணி” என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.
அமர்வு-2 இல், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ் இணைப் பேராசிரியர் (ஓய்வு) முனைவர் இந்திரா மனுவல் அவர்கள், ”செந்தமிழ் இதழில் சேரநாட்டுத் தமிழ் அறிஞர்களின் ஆய்வுகள்” என்னும் தலைப்பில் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் பல வரலாற்றுத் தரவுகள் அடங்கியுள்ளமையை எடுத்துக்கூறி ஆய்வுக் கட்டுரை வழங்கினார்.
தொட்ர்ந்து, மதுரை அருள்மிகு
மீனாட்சி கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் யாழ் சு.சந்திரா “செந்தமிழ்
இதழில் சங்கப் பெண்பாற் புலவர்கள் குறித்த ஆய்வுகள்” என்னும் தலைப்பில் ஆய்வுரை
நிகழ்த்தினார். இவர் தம் உரையில், பாடல் வரிகளால் பெயர் பெற்ற சங்கப் புலவர் பெயர்களில்
பெண்பாற் புலவர்கள் இருக்கக் கூடும் என்ற நிலையில் சிந்திக்க வேண்டியுள்ளது என்று
கூறினார்.
இதனைத் தொட்ர்ந்து, பச்சையப்பன் கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர்.வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர், “செந்தமிழ் இதழில் சேது நாட்டு
ஊர்ப்பெயர்கள்” என்னும்
தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார். இவர் தம் உரையில் சேதுநாட்டு ஊர்ப்பெயர்கள்
அமைந்துள்ள விதமும் காரணங்களும் குறித்த சிந்தனைகள் செந்தமிழ் இதழில் இடம்
பெற்றுள்ள செய்திகள் விவாதிக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆய்வறிஞகளின்
உரைகளுக்குப் பின் பங்கேற்பாளர்களின் வினாக்களுக்குப் பதிலுரைக்கப் படுதலும்,
ஐயங்கள் தெளிவு படுத்தலும் சிறப்பிற்குரிய தன்மையாக விளங்கின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக