செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

புதன், 11 டிசம்பர், 2013

மனித உரிமைகள் தினம் உறுதிமொழி எடுத்தல் - செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில்



மனித உரிமைகள் தினம் உறுதிமொழி எடுத்தல்


10-12-2013 செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரியில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி எடுத்தல் நடைபெற்றது.

செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை,எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர்(பொ)முனைவர் மு.மீனா அவர்கள் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி உரையினை வழங்கினார். செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டு மனித உரிமைகள் தினம் உரையினைக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

முன்னாள் மாணவர் நூல் வெளியீட்டு விழா-செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில்



முன்னாள் மாணவர் நூல் வெளியீட்டு விழா

நிகழ்ச்சி நிரல்
 நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகள்









11-12-2013 புதன்கிழமையன்று காலை 11 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் 2007-2010 ஆம் கல்வியாண்டுகளில் இளங்கலைத் தமிழ் (பி.ஏ.,) பயின்ற முன்னாள் மாணவர் ஜோவி அவர்கள் எழுதிய பாதை காட்டும் செங்குருதி என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்து நூலினை வெளியிட்டார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை,எம்.ஏ.,எம்ஃபில்.,அவர்கள் முன்னிலை வகித்து நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். கல்லூரி முதல்வர்(பொ)முனைவர் மு.மீனா அவர்கள் நூல் மதிப்புரை வழங்கினார். செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ,மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். பின்னர்,குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும் பற்றித் தமிழ் பயிலும் மாணவர்கட்குப் பயிலரங்கினை நடத்தினார்.

திங்கள், 9 டிசம்பர், 2013

குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும்



மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க்கல்லூரியில்குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும்
பயிலரங்கம்
அழைப்பிதழ்
 குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும்





மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் உள்ள வள்ளல் பொன்.பாண்டித்துரை ஆய்வுக் கருத்தரங்க அறையில் 11-12-2013  புதன் கிழமை குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும்என்னும் தலைப்பில் சிறப்புப் பயிலரங்கு நடைபெற்றது. மதுரை செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கச் செயலாளர் இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்தார். செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் மு.மீனா அவர்கள் வாழ்த்துரை நல்கினார். கவிஞர் ஜோவி (கவிப்பிரியன் ஜோ.இன்பெண்ட் விஜய் அமிர்த விக்டர்) குறும்பட்த் தயாரிப்பாளர்,சென்னை அவர்கள் குறும்படம் தயாரிப்பு ஆக்கமும் ஊக்கமும் என்னும் தலைப்பில் பயிலரங்கினை நடத்தினார். மாணவர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு பயனுற்றனர்.செந்தமிழ்க் கல்லூரித் தமிழ் உதவிப் பேராசிரியர் திரு.மு.செந்தில்குமார் நன்றியுரை வழங்கினார்.

”சித்தர் இலக்கியத்தில் வாழ்வியல் நெறிகள்”


மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க்கல்லூரியில்”சித்தர் இலக்கியத்தில் வாழ்வியல் நெறிகள்” 
அழைப்பிதழ்


 

 
 

சிறப்புப் பொழிவு
மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் உள்ள வள்ளல் பொன்.பாண்டித்துரை ஆய்வுக் கருத்தரங்க அறையில் 09-12-2013  திங்கட் கிழமை சித்தர் இலக்கியத்தில் வாழ்வியல் நெறிகள்என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. மதுரை செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கம் செயலாளர் இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்தார். செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் மு.மீனா அவர்கள் வாழ்த்துரை நல்கினார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இளமதி ஜானகிராமன் அவர்கள் சித்தர் இலக்கியத்தில் வாழ்வியல் நெறிகள்என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றினார். மாணவர்கள் அனைவரும் திரளாக்க் கலந்து கொண்டு சித்தர்களின் இலக்கியங்களில் காணக்கிடக்கின்ற வாழ்வியல் உண்மைகளை அறிந்து மகிழ்ந்தனர். செந்தமிழ்க்கல்லூரித் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் அ.நந்தினி நன்றியுரை வழங்கினார்.