மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் தேசியக்கருத்தரங்கம்
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் வெளியீடான நூற்றாண்டு கண்ட செந்தமிழ் இலக்கிய இதழ் குறித்த செவ்வியல் ஆய்வுகள்
மதுரை செந்தமிழ்க்கல்லூரியும்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் 1902
ஆம் ஆண்டிலிருந்து 110 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டு வரும் செந்தமிழ் என்னும்
இலக்கிய இதழ் குறித்த தேசியக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இத்தேசியக்
கருத்தரங்கு மூன்று நாள் (31-01-2013 முதல் 02-02-2013 வரை) நடைபெறுகிறது. மதுரை
செந்தமிழ்க்கல்லூரியில்” செந்தமிழ்
இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் ” என்னும் தலைப்பில் நடைபெறும் இத்தேசியக் கருத்தரங்கில் 27
அறிஞர்கள் செந்தமிழ் இதழ் குறித்து வெவ்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள்
சமர்ப்பிக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழக முதுகலை, இளம்
ஆய்வுப் பட்ட மாணவர்களும், முனைவர் பட்ட மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறும்
வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை முனைவர் மு.மீனா,முதல்வர்(பொ) அவர்கள் செய்து வருகின்றார்கள். தமிழ் ஆர்வலர்கள் வருகையும், மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் 110 ஆண்டுக்கும் மேலான செந்தமிழ் இலக்கிய இதழ்ப்பணியும் எங்களுக்குப் பெருமை சேர்க்கும்.
சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் மதுரை,செந்தமிழ்க்கல்லூரித்
தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நட்த்தும் தேசியக் கருத்தரங்கம் (31-01-2013 முதல்
02-02-2013 வரை) செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள்
தேசியக் கருத்தரங்கமும்
அறிஞர்களின் பங்கேற்பும்
தேசியக் கருத்தரங்கமும்-அறிஞர்களின்மதிப்புரையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக