மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் சமூக நல்லிணக்கப் பொங்கல் விழா
|
சமூக நல்லிணக்கப் பொங்கல் விழா அழைப்பிதழ்
|
மதுரைத்
தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழர்ப் பொங்கல் விழா 10-01-2013 வியாழக்கிழமை
அன்று காலை 10 மணிக்கு வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம்
செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் தமிழரின் பாரம்பரியமும் பண்பாடும் இன்றைய
மாணவர்களுக்கு வாழ்க்கைப் பயிற்சியாகச் சமூக நல்லிணக்கப் பொங்கல் விழா நிகழ்வுகள் வழி
அறிவுறுத்தப்பட்டன.
|
மதுரை செந்தமிழ்க் கல்லூரித் தலைவர்,செயலர்,கல்லூரிக் குழு
உறுப்பினர்கள்,முதல்வர்,பேராசிரியர்,பேராசிரியைகள் |
இவ்விழாவிற்குத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும்,
செந்தமிழ்க்கல்லூரிச் செயலருமாகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி, அவர்கள், மதுரைத்
தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள், செந்தமிழ்க்கல்லூரித் தலைவர் திருமிகு
எம்.பி.ஆர்.மலையாண்டி என்ற அசோக் அவர்கள், செந்தமிழ்க்கல்லூரிக் குழு
உறுப்பினர்கள் திருமிகு சு.வீரணசாமி, அவர்கள், திருமிகு.க.முத்தையா பசும்பொன், அவர்கள், திருமிகு அழகர்சாமி, அவர்கள், திருமிகு இரமணி, அவர்கள், செந்தமிழ்க்கல்லூரி
முதல்வர்(பொ) மு.மீனா அவர்கள், பொங்கல் விழா நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தனர்.
|
செந்தமிழ்க்கல்லூரிச் செயலர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி,பி.ஏ., அவர்கள், |
|
செந்தமிழ்க்கல்லூரிச் செயலர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி,பி.ஏ., அவர்கள், |
இளங்கலை, இளம்
இலக்கியம், முதுகலை, இளம் ஆய்வாளர்கள். முனைவர் பட்ட மாணவர்கள் அனைவரும் பொங்கல் வைத்துக் கொண்டாடுவதற்குக் கல்லூரிப் பேராசிரியர்,பேராசிரியைகள் வழிகாட்டினர். மாணவர்களின் பெற்றோர்களும், முன்னாள்
மாணவர்களும், ஏராளமானப்
பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும், பத்திரிகை நண்பர்களும், தொலைக்காட்சி
அன்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|
கரகாட்டக் கலை |
|
மாணவியர் நடனக்கலை |
மாணவர்கள்,
மாணவியர்கள் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளான கும்மியாட்டம், கோலாட்டம்,
கரகாட்டம், மற்றும் உடல் திறன் ஆட்டக்கலைகளையும் நிகழ்த்தி மகிழ்ச்சிப் பொங்கலைக்
கொண்டாடிச் சமூக நல்லிணக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக