செந்தமிழ்க் கல்லூரியில் 56 ஆவது பட்டமளிப்பு விழா
செந்தமிழ்க் கல்லூரியில் 58 ஆவது பட்டமளிப்பு விழா 24-05-2013 வெள்ளிக்கிழமை
காலை 10.00 மணிக்கு பாண்டித்துரைத்தேவர் அருள் வளாகத்தில் நடைபெற்றது. கல்விக்குழு
வருகையைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர் ஆட்சிக்குழு
உறுப்பினர் திருமிகு வீரணசாமி பி.எஸ்சி.பி.எல்., அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்தினார். செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத்
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமையுரையாற்றினார்.மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு
இரா.அழகுமலை>எம்.ஏ.>எம்ஃபில்.> அவர்கள் முன்னிலை
வகித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
புலமுதன்மையர் முனைவர் மு.இராஜ்ஜியக்கொடி விழாச்சிறப்புரையும், மாணவர்களுக்குப்
பட்டங்களையும் வழங்கினார்.செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையாபசும்பொன்
வாழ்த்துரை வழ்ங்கினார்.கல்லூரி முதல்வர்(பொ), முனைவர் மு.மீனா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ,மாணவியர்கள்
திரளாகக் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக