மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா
20-04-2013 சனிக்கிழமை
செந்தமிழ்க்கல்லூரியின் 56 ஆவது கல்லூரி ஆண்டு
விழா, விளையாட்டு விழா, மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட விழா என்னும் முப்பெரும்
விழாச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப் பட்டது.
இவ்விழாவிற்கு மதுரை
செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை
வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கம் செயலாளர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள்
முன்னிலை வகித்தார். செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் மு.மீனா அவர்கள்
கல்லூரியின் 56 ஆவது ஆண்டறிக்கையினை வழங்கினார். மதுரை
மாநகர்க் காவல் துறை இணை ஆணையாளர் திருமிகு இரா.திருநாவுக்கரசு எம்.எஸ்சி.,பி.எல்.,T.P.S., அவர்கள்
விழாப்பேருரையும், மாணவர்கட்குப் பரிசுகளும்,சான்றிதழ்களும்
வழங்கினார்.
கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையா பசும்பொன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். செந்தமிழ்க்கல்லூரித் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் சு.விஜயன் நன்றியுரை வழங்கினார்.
கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையா பசும்பொன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். செந்தமிழ்க்கல்லூரித் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் சு.விஜயன் நன்றியுரை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக