மதுரைத்
தமிழ்ச் சங்கம்
செந்தமிழ்க் கல்லூரியில்
மகாவித்வான் மு.இராகவ அய்யங்காரின்
செந்தமிழ்க் கல்லூரியில்
மகாவித்வான் மு.இராகவ அய்யங்காரின்
நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
மதுரைத்
தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் மகாவித்வான்
மு.இராகவ அய்யங்காரின் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு 26-07-2012 வியாழக்கிழமை
அன்று காலை 11.00 மணிக்கு இறை வணக்கத்துடன் தொடங்கியது.
இவ் அறக்கட்டளைச் சொற்பொழிவிற்குத்
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும், செந்தமிழ்க்கல்லூரிச் செயலருமாகிய திருமிகு
கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். அப்போது மகாவித்வான்
மு.இராகவைய்யங்காரின் அரும்பணிகளை எடுத்துரைத்தார்கள். மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர்
திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்து, மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் மகாவித்வான்
மு.இராகவைய்யங்காரின் தமிழ்ப்பணியின் மேன்மையை இன்றைய மாணவர்கள் அறிந்து
நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதோடு தமிழ்ப்பணி ஆற்றும் எண்ணம் இன்றைய மாண்வர்களிடம்
வளரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு
செய்திருந்த அறக்கட்டளைச் சொற்பொழிவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் செந்தமிழ்க்கல்லூரி
முதல்வர்(பொ) மு.மீனா அவர்கள் இன்முகத்துடன் வரவேற்று சிறந்ததொரு வரவேற்புரை
நல்கினார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட ஆஸ்தானப் புலவர் திருச்சி கை. கல்யாணராமன் அவர்கள்
”நெஞ்சத்தை நெகிழ்விக்கும்
சந்திப்பு” என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும், பிற கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களும்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக