மதுரை செந்தமிழ்க் கல்லூரியில்
22-06-2012 அன்று
வெள்ளிக்கிழமை வள்ளல்.பொன்.பாண்டித்துரைத்தேவர் அருள் வளாகத்தில் இறை வணக்கத்துடன்
மாணவர்கட்கான 2012-2013 ஆம் கல்வியாண்டின் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்க அழைப்பிதழ் |
செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின்
கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு இரா.குருசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள்.
தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள் முன்னிலை வகித்தார். மாணவர்கட்கான
சிறப்புக் கருத்தரங்கில் கலைமாமணி திரு.கூத்தபிரான் (வானொலி அண்ணா) அவர்கள் ”இளைஞர்கள் எதிர்கொள்ளும்
சிக்கல்களும் எளிய தீர்வுகளும்”
என்னும் தலைப்பில் சிறப்புரையினை வழங்கினார். செந்தமிழ்க் கல்லூரி முதல்வர்
(பொறுப்பு) முனைவர் மு.மீனா அவர்கள் நன்றியுரை வழங்கினார். அனைத்து மாணவர்களும்
கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக