செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

திங்கள், 30 ஜூலை, 2012

மதுரைத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில்

மதுரைத் தமிழ்ச் சங்கம்
  
 செந்தமிழ்க் கல்லூரியில் 

மகாவித்வான் மு.இராகவ அய்யங்காரின் 

நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
மதுரைத் தமிழ்ச் சங்கம்  செந்தமிழ்க் கல்லூரியில் மகாவித்வான் மு.இராகவ அய்யங்காரின் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு 26-07-2012 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு இறை வணக்கத்துடன் தொடங்கியது. 

இவ் அறக்கட்டளைச் சொற்பொழிவிற்குத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத்  தலைவரும், செந்தமிழ்க்கல்லூரிச் செயலருமாகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். அப்போது மகாவித்வான் மு.இராகவைய்யங்காரின் அரும்பணிகளை எடுத்துரைத்தார்கள். மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்து, மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் மகாவித்வான் மு.இராகவைய்யங்காரின் தமிழ்ப்பணியின் மேன்மையை இன்றைய மாணவர்கள் அறிந்து நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதோடு தமிழ்ப்பணி ஆற்றும் எண்ணம் இன்றைய மாண்வர்களிடம் வளரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த அறக்கட்டளைச் சொற்பொழிவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்(பொ) மு.மீனா அவர்கள் இன்முகத்துடன் வரவேற்று சிறந்ததொரு வரவேற்புரை நல்கினார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட ஆஸ்தானப் புலவர் திருச்சி கை. கல்யாணராமன் அவர்கள் நெஞ்சத்தை நெகிழ்விக்கும் சந்திப்பு என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும், பிற கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திங்கள், 23 ஜூலை, 2012

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பல்வகைச் சான்றிதழ் வகுப்புக்கள் தொடக்க விழா


   மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பல்வகைச் சான்றிதழ் வகுப்புக்கள் தொடக்க விழா 23-07-2012 திங்கட்கிழமை அன்று இறை வணக்கத்துடன் தொடங்கியது.

 
1. தமிழ்க் கற்பித்தல் 2. போட்டித் தமிழ் 3. போட்டித் தேர்வுகளுக்கான ஆங்கிலம்
4. காந்தியச் சிந்தனை பட்டயச் சான்றிதழ்     5. காந்தியச் சிந்தனை சான்றிதழ் வகுப்பு
6. ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டியல்          7. யோகா மற்றும் தியானம்
8. சமஸ்கிருதம்      9. இதழியல்    10. வலைப்பூ                        11. கணினிப் பயன்பாடு சான்றிதழ் வகுப்பு 12. கணினிப் பயன்பாடு பட்டய வகுப்பு ஆகிய பல்வகைச் சான்றிதழ் வகுப்புகள் செந்தமிழ்க் கல்லூரியில் தொடங்கப் பட்டன.
 
  செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வ்கித்தார்கள். 


இவ்விழாவில் மதுரை காமராசர்  பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்  முதுமுனைவர் இரா.கண்ணன் அவர்கள் வகுப்புகளைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.  மதுரைத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையா பசும்பொன்,பி.ஏ.,பி.எல்., செந்தமிழ்க் கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
        
 மதுரை செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் மு.மீனா அவர்கள் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார் . 
   இளங்கலை மூன்றாமாண்டு மாணவி இரா.விக்னேசுவரி  நன்றியுரை கூறினார். விழா நிகழ்வுகளை உதவிப்பேராசிரியர் முனைவர் செ.இராஜமோகன் தொகுத்து வழங்கினார்.

சனி, 14 ஜூலை, 2012

செந்தமிழ்க் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நல்லிணக்க அமைப்பு


செந்தமிழ்க் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க
 நல்லிணக்க அமைப்பு
செந்தமிழ்க் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்த முதலாம் ஆண்டு மாணவர்கட்கான வரவேற்பும் அறிமுக விழாவும் 05-07-2012 அன்று வியாழக்கிழமை இறை வணக்கத்துடன் தொடங்கியது. செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு இரா.குருசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். 
முதலாம் ஆண்டு மாணவர்கட்கான வரவேற்பும் அறிமுகவிழாவும்
 மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள் முன்னிலை வ்கித்தார்கள். 2012-2013 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கட்கான வகுப்புக்களைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையினைத் மதுரை திலகர் திடல் காவல்துறை ஆய்வாள்ர் திருமிகு வே.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்கள். கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையாபசும்பொன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் மதுரை செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் மு.மீனா அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்


மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் 22-06-2012 அன்று வெள்ளிக்கிழமை வள்ளல்.பொன்.பாண்டித்துரைத்தேவர் அருள் வளாகத்தில் இறை வணக்கத்துடன் மாணவர்கட்கான 2012-2013 ஆம் கல்வியாண்டின் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. 
கருத்தரங்க அழைப்பிதழ்

செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு இரா.குருசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள் முன்னிலை வகித்தார். மாணவர்கட்கான சிறப்புக் கருத்தரங்கில் கலைமாமணி திரு.கூத்தபிரான் (வானொலி அண்ணா) அவர்கள் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் எளிய தீர்வுகளும் என்னும் தலைப்பில் சிறப்புரையினை வழங்கினார். செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் மு.மீனா அவர்கள் நன்றியுரை வழங்கினார். அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.