மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெறுகிறது.கணினி வழித் தமிழ்க்கல்வி பரவும் வகை செய்ய வாழ்த்துவோம்
வாருங்களேன்!!
வாருங்களேன்!!
செந்தமிழ்க் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா அழைப்பிதழ் |
செந்தமிழ்க் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 03-04-2012 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் செந்தமிழ்க்கல்லூரி முதன்மையர் முனைவர் க,சின்னப்பா வரவேற்புரையாற்றுகிறார். செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி தலைமை வகிக்கிறார்கள். ம்துரை நான்காம் தமிழ்ச்சங்கச் செயலாளர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். மதுரை, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) திருமிகு அ.சங்கர் எம்.எஸ்சி., அவர்கள் மடிக்கணினியினைச் செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வர்(பொ) முனைவர் மு.மீனா நன்றியுரை வழங்குகிறார்கள். செந்தமிழ்க் கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர், பேராசிரியைகள்,அலுவலக நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாணவ,மாணவியர்களும் கலந்து கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக