மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் சங்கப் பெண் கவிஞர்களின் கருத்துப்புலப்பாட்டு நெறி - பயிலரங்கம் - நிகழ்வுகள்
தகவல் அறிவிப்புச் செய்திகள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனம்.
இஃது உலகளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப்பெற்றுள்ள உயராய்வு நிறுவனமாகும்.
இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் இயங்கிவருகிறது.
மதுரை
செந்தமிழ்க்கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து சங்கப் பெண் கவிஞர்களின் கருத்துப்புலப்பாட்டு நெறி
என்னும் பொருண்மையிலான பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிலரங்கு பத்து
நாட்கள் (22-01-2014 முதல் 01-02-2014 வரை) நடைபெறுகிறது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் மதுரை செந்தமிழ்க்கல்லூரியும்
இணைந்து ” சங்கப் பெண் கவிஞர்களின் கருத்துப்புலப்பாட்டு நெறி” என்னும் தலைப்பில் பத்து
நாட்கள் (22-01-2014 முதல் 01-02-2014 வரை) நட்த்தும் பயிலரங்கின்
துவக்க விழா. 22-01-2014 புதன் கிழமையன்று காலை 10 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில்
உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத்
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்துத் தொடங்கி வைக்கிறார்கள். மதுரை
நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை,எம்.ஏ.,எம்ஃபில்.> அவர்களும்,
செந்தமிழ்க் கல்லூரித் தலைவர் திருமிகு.சு.வீரணசாமி அவர்களும் முன்னிலை
வகிக்கிறார்கள்.
செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்(பொ), முனைவர் மு.மீனா
வரவேற்புரை வழங்குகிறார்; மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் திருமிகு
க.முத்தையா பசும்பொன் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார். கோயம்புத்தூர் தூர்தர்ஷ்ன்
கேந்திரா இயக்குநர், கவிஞர், கலைமாமணி ஆண்டாள்
பிரியதர்ஷினி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார். செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு
உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள்
திரளாகக் கலந்து கொள்கிறார்கள். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.நந்தினி
நன்றியுரை வழங்க உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக