செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வியாழன், 19 செப்டம்பர், 2013

செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு



செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு
”உலகின் முதல் மொழி தமிழ்மொழியே”
 
சிறப்புச் சொற்பொழிவு அழைப்பிதழ்
2013-14 ஆம் கல்வியாண்டின் செப்டம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் உலகின் முதல் மொழி தமிழ்மொழியே என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்வுள்ளது.
செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமையேற்கிறார். திருமிகு.சாத்தூர் சேகரன் அவர்கள் சொற்பொழிவினை ஆற்றவுள்ளார்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்,113 ஆம் ஆண்டுத் தொடக்க விழா


மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்,113 ஆம் ஆண்டுத் தொடக்க விழா மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் 
113 ஆம் ஆண்டுத் தொடக்க விழா அழைப்பிதழ்


113 ஆம் ஆண்டுத் தொடக்க விழா உரை அரங்கம் 
நன்றி - தினத்தந்தி - 15-09-2013

நன்றி - மாலை மலர் - நாள்-14-09-2013

நன்றி - மாலை முரசு - நாள்-14-09-2013
நன்றி - தினமலர் - 18-09-2013
     வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்கள் 14-09-1901 ஆம் ஆண்டு மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தினை ஆரம்பித்துத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அர்ப்பணித்தார்.அதன் பங்கும் பணியும் தேமதுரத் தமிழோசையினை உலகெல்லாம் பரப்பி வருவது நாடறிந்ததே.அதன் 113 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவும், பேராசிரியர்களின் உரையரங்கமும், கவியரங்கமும் 14-09-2013 சனிக்கிழமை காலை 11.00 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக தமிழ்ச் சஙகச் சாலையில் நிறுவப்பட்டுள்ள வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள், செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள், செந்தமிழ்க் கல்லூரித் தலைவர் சு.வீரணசாமி பி.எஸ்சி.,பி.எல்., அவர்கள், மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் க.முத்தையா பசும்பொன் பி.ஏ.,பி.எல்., அவர்கள், செந்தமிழ்க் கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் மு.மீனா அவர்கள்தமிழ்ச்சங்கம் மற்றும் செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலக நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு மாலை அணிவித்து ம்ரியாதை செலுத்தினர். தமிழ் நாளிதழ்கள் 113 ஆம் ஆண்டுத் தொடக்க விழா, பேராசிரியர்களின் உரையரங்கம், கவியரங்கம் நிகழ்வு குறித்துப் புகழாரம் சூட்டியுள்ளமை பெருமைக்குரியதாகும்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா


மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியர் தினவிழாக் கொண்டாட்டம்
 
 
 


     
2013-14 ஆம் கல்வியாண்டின் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியர் தினவிழாக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்பொழுது ஆசிரியப் பணியின் புனிதத்தையும், கடமை உணர்வையும், பொறுப்புக்களையும் கல்லூரிச் செயலர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் எடுத்துரைத்தார்கள். மேலும், நற்பண்புகளுடன் கூடிய நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்குவதில் நாம் கையாள வேண்டிய நடைமுறைகளையும், எதிர்நோக்கும் சவால்களையும் தாய்மையுண்ர்வுடன் நடந்து கொண்டு, மனம் தளராது பாடுபட வேண்டும். மாணவர்களின் வளர்ச்சியும் பாராட்டுதலுமே தமிழில்  நன்னூல் எழுதிய இலக்கணி பவணந்தி முனிவர் கூறும் நல்லாசிரியர்க்குரிய பண்புகளாகும் என்று குறிப்பிட்டார். கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் மு.மீனா அவர்கள் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மை நமக்கும் நம் நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்கும் என்று குறிப்பிட்டார். கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் நற்பணியாற்றிட உறுதிமொழி எடுத்துக் கொணடனர்.