மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் மகாவித்வான் மு.இராகவைய்யங்கார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
மு.இராகவைய்யங்காரின் தமிழ்ப்பணி
அறக்கட்டளைச் சொற்பொழிவு அழைப்பிதழ் |
மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் உள்ள
வள்ளல் பொன்.பாண்டித்துரை அருள் வளாகத்தில் 26-07-2013 வெள்ளிக் கிழமை (காலை 11.00 மணி) ”மு.இராகவைய்யங்காரின் தமிழ்ப்பணி” என்னும் தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவு
நடைபெற்றது. மதுரை செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி
பி.ஏ., அவர்கள் முன்னிலை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கம் செயலாளர் இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்.,
அவர்கள் தலைமை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திருமிகு க.முத்தையா பசும்பொன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். செந்தமிழ்க்கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு வெ. அழ்கர்சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மகாவித்வான் மு.இராகவைய்யங்கார் பெயரில்
அமைக்கப்பட்ட நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு சார்பாக மதுரை செளராஷ்டிரக் கல்லூரி வணிகவியல் துறை மேனாள் பேராசிரியர் பொற்கிழிக்கவிஞர் முனைவர் சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் ”மு.இராகவைய்யங்காரின் தமிழ்ப்பணி” என்னும் தலைப்பில் உரையாற்றினார். செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் மு.மீனா அவர்கள் நன்றியுரை நல்கினார். தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் கோ.சுப்புலெட்சுமி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
நன்றி : மாலை முரசு - 26 -07 -2013 |
மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் மகாவித்வான் மு.இராகவைய்யங்கார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக