செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வெள்ளி, 26 ஜூலை, 2013

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு


மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் மகாவித்வான் மு.இராகவைய்யங்கார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு 

மு.இராகவைய்யங்காரின் தமிழ்ப்பணி
அறக்கட்டளைச் சொற்பொழிவு அழைப்பிதழ்
 

   மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் உள்ள வள்ளல் பொன்.பாண்டித்துரை அருள் வளாகத்தில் 26-07-2013  வெள்ளிக் கிழமை (காலை 11.00 மணி)  ”மு.இராகவைய்யங்காரின் தமிழ்ப்பணி” என்னும் தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. மதுரை செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் முன்னிலை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கம் செயலாளர் இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திருமிகு க.முத்தையா பசும்பொன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். செந்தமிழ்க்கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு வெ. அழ்கர்சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மகாவித்வான் மு.இராகவைய்யங்கார் பெயரில் அமைக்கப்பட்ட நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு சார்பாக மதுரை செளராஷ்டிரக் கல்லூரி வணிகவியல் துறை மேனாள் பேராசிரியர்  பொற்கிழிக்கவிஞர் முனைவர் சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள்  ”மு.இராகவைய்யங்காரின் தமிழ்ப்பணி”  என்னும் தலைப்பில் உரையாற்றினார். செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் மு.மீனா அவர்கள் நன்றியுரை நல்கினார். தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் கோ.சுப்புலெட்சுமி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.

நன்றி : மாலை முரசு - 26 -07 -2013
மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் மகாவித்வான் மு.இராகவைய்யங்கார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு 

மு.இராகவைய்யங்காரின் தமிழ்ப்பணி 


 




 

செவ்வாய், 9 ஜூலை, 2013

மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள் வருகை

மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள் வருகை
முதலாண்டு மாணவர்களுக்கான அழைப்பிதழ்
     2013-2014 கல்வியாண்டு மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் முதலாண்டு  பயிலும் மாணவர்களுக்கு வகுப்புக்களின் தொடக்க விழா வெகுவிமரிசையாக 10-07-2013 புதன் கிழமையன்று காலை 10 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவினைக் கல்லூரிப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. 
முதல்வர்(பொ), முனைவர் மு.மீனா,அவர்கள் திருமிகு க.முத்தையா பசும்பொன்,அவர்கள் உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) திருமிகு வீ.மலைச்சாமி,அவர்கள், செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள், செந்தமிழ்க் கல்லூரித் தலைவர் திருமிகு சு.வீரணசாமி மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை,எம்.ஏ.,எம்ஃபில்.,அவர்கள் (இடமிருந்து வலமாக)


நன்றி: மாலை மலர்   (மதுரைப்பதிப்பு -10-07-2013)

செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள்
மதுரை காவல் துறை உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) திருமிகு வீ.மலைச்சாமி, அவர்கள்,  






    செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை,எம்.ஏ.,எம்ஃபில்., அவர்களும் செந்தமிழ்க் கல்லூரித் தலைவர் திருமிகு சு.வீரணசாமி அவர்களும், முன்னிலை வகித்தனர். மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ,மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர்(பொ), முனைவர் மு.மீனா வருகை புரிந்த அனைவரையும் நிர்வாகத்தின் சார்பாக வரவேற்றார்.   மதுரை காவல் துறை உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) திருமிகு வீ.மலைச்சாமி, அவர்கள், வகுப்புக்களைத் தொடங்கி வைத்து மாணவர்களுக்கான தலைமைப் பண்புகள், ஒழுக்க நெறிகளையும், இன்றைய கல்வித் தளத்தில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் கருத்துரை வழங்கினார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் திருமிகு க.முத்தையா பசும்பொன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாகப் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதியான கீழ்ப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் திரு.என்.பங்கராசு நன்றியுரை வழங்கினார்.