செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

சனி, 20 ஏப்ரல், 2013

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா



       20-04-2013 சனிக்கிழமை செந்தமிழ்க்கல்லூரியின் 56 ஆவது கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா, மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட விழா என்னும் முப்பெரும் விழாச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப் பட்டது.
         இவ்விழாவிற்கு மதுரை செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கம் செயலாளர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்தார். செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் மு.மீனா அவர்கள் கல்லூரியின்  56 ஆவது ஆண்டறிக்கையினை வழங்கினார். மதுரை மாநகர்க் காவல் துறை இணை ஆணையாளர் திருமிகு இரா.திருநாவுக்கரசு எம்.எஸ்சி.,பி.எல்.,T.P.S., அவர்கள் விழாப்பேருரையும், மாணவர்கட்குப் பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கினார்.
            கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையா பசும்பொன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். செந்தமிழ்க்கல்லூரித் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் சு.விஜயன்  நன்றியுரை வழங்கினார். 
           செந்தமிழ்க்கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்களும், தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும், மாணவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
தினமணி  நாளிதழ்  21-04-2013
 

மதுரை தமிழ்ச் சங்கம்,அறக்கட்டளைச் சொற்பொழிவு


மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் 
அறக்கட்டளைச் சொற்பொழிவு அழைப்பிதழ்
               மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் உள்ள வள்ளல் பொன்.பாண்டித்துரை அருள் வளாகத்தில் 17-04-2013  புதன் கிழமை அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. மதுரை செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்கம் செயலாளர் இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்தார். செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் மு.மீனா அவர்கள் வராவேற்புரை நல்கினார். மலேசியத் தமிழ்க்குயில் கலிய பெருமாள் உலகநாயகி பெயரில் அமைக்கப்பட்ட அறக்கட்டளைச் சொற்பொழிவு சார்பாக மதுரை அருள்மிகு மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் யாழ் சு.சந்திரா அவர்கள் திருவிளையாடற் புராணத்தில் வரலாறும் புனைவும் என்னும் தலைப்பில் உரையாற்றினார். செந்தமிழ்க்கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் சு.விஜயன் நன்றியுரை வழங்கினார்.