மதுரை செந்தமிழ்க் கல்லூரியில்
மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் 27-03-2012 அன்று தமிழ் வலைப்பூக்கள் என்ற பயிலரங்கு நடைபெற்றது. இப்பயிலரங்கினைச் செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் திருமிகு.கோச்சடை இரா.குருசாமி அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்கள்.
இப்பயிலரங்கில் இக்கல்லூரி முதன்மையர் திருமிகு.முனைவர் க.சின்னப்பா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்வலைப்பூக்கள் பயிலரங்கில் 75 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். விவேகானந்த கல்லூரிப் பேராசிரியர் ம்ற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்; மு.முத்தையா அவர்கள் இப்பயிற்சியினை மாணவர்கட்குச் செய்முறைப் பயிற்சியுடன் விளக்கிக் காட்டினார்.
முனைவர் மு.முத்தையா>தமிழ்ப்பேராசிரியர்
மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் திருமிகு.மு.மீனா அவர்கள் இப்பயிலரங்கின் நிகழ்வை ஏற்பாடு செய்தார். இப்பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவ,மாணவியர்கள் பயிற்சி குறித்த மதிப்பீடும் கருத்துரையும் வழங்கினார்கள். செந்தமிழ்க் கல்லூரி முதுகலை மாணவர் ஜோ.பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.
மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் 27-03-2012 அன்று தமிழ் வலைப்பூக்கள் என்ற பயிலரங்கு நடைபெற்றது. இப்பயிலரங்கினைச் செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் திருமிகு.கோச்சடை இரா.குருசாமி அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்கள்.
செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர்>முதன்மையர்>முதல்வர்>தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கில் பங்குபெறும் பயிற்சிமாணவர்கள் |
முனைவர் மு.முத்தையா>தமிழ்ப்பேராசிரியர்
மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் திருமிகு.மு.மீனா அவர்கள் இப்பயிலரங்கின் நிகழ்வை ஏற்பாடு செய்தார். இப்பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவ,மாணவியர்கள் பயிற்சி குறித்த மதிப்பீடும் கருத்துரையும் வழங்கினார்கள். செந்தமிழ்க் கல்லூரி முதுகலை மாணவர் ஜோ.பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.
வாழ்த்துக்கள்.இன்றைய மாணவர்கட்குத் தேவையான அறிவியல் தமிழ்க் கல்வி வலைப்பூக்கள் பயிலரங்கப் பயிற்சி வழி நிச்சயம் கிடைத்திருக்கும்.சந்தேகமில்லை.தொடரட்டும் இத்தகைய அறிவியல் தமிழ்க் கற்றறியும் பணி
பதிலளிநீக்குநன்றி. நல்லதொரு பணியை நாளும் செய்வோம்
பதிலளிநீக்குதமிழ் இலக்கியம்,இலக்கண அறிவுச்செழுமையோடு இணையத் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு இத்தகைய பயிலரங்குகள் வழி காட்டும்.முயற்சிக்குப் பாராட்டுக்கள்
பதிலளிநீக்கு