செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் 67 ஆவது சுதந்திர தின விழா

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் 67 ஆவது சுதந்திர தினவிழாக் கொண்டாட்டம்
67 ஆவது சுதந்திர தின விழா அழைப்பிதழ்

        மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் 67 ஆவது சுதந்திர தினவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.15-08-2013 வியாழக்கிழமையன்று காலை 9 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார். பின்னர் பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் 67 ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் தொடர்பாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 


    
  

 
 
      இந்நிகழ்விற்குச் செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை>எம்.ஏ.>எம்ஃபில்.> அவர்களும்,செந்தமிழ்க் கல்லூரித் தலைவர் திருமிகு வீரணசாமி பி.எஸ்சி.பி.எல்., அவர்களும், முன்னிலை வகித்தார்கள். மற்றும் செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ,மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர்(பொ),  முனைவர் மு.மீனா வரவேற்புரையினை வழங்கினார்.

       மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் திருமிகு க.முத்தையா பசும்பொன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.நாட்டுப் பற்று,தேசபக்தி,தேசிய ஒருமைப்பாடு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் தொடர்புடைய  கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் சுதந்திர தின விழாச் சிறப்பு நிகழ்வாகக் கொண்டாடினர். தமிழ் உதவிப் பேராசிரியை முனைவர் கோ.சுப்புலெட்சுமி நன்றியுரை வழங்கினார்.
 

செந்தமிழ்க்கல்லூரியில் மலேசியப் பேராசிரியரின் சொற்பொழிவு

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் மலேசியப் பேராசிரியரின் சொற்பொழிவு 



        14-08-2013 புதன்கிழமையன்று காலை 10 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் மலேசியப் பேராசிரியர் ம.மன்னர் மன்னன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு மலேயத் தமிழ் என்னும் தலைப்பில் நடைபெற்றது.
   செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்தார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை,எம்.ஏ.,எம்ஃபில்.,அவர்கள் முன்னிலை வகித்தார். செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ,மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர்(பொ)முனைவர் மு.மீனா அவர்கள் வரவேற்பு உரையினை வழங்கினார். தமிழ் உதவிப் பேராசிரியர் திரு.மு.செந்தில்குமார் நன்றி கூறினார்.
   மலேயப் பல்கலைக் கழகத் தமிழ் மொழிப்புலத் த்மிழ்ப் பேராசிரியர் முனைவர் ம.மன்னர் மன்னன் அவர்கள் மலேயத்தமிழ் என்னும் தம் சிறப்புச் சொற்பொழிவின் போது, தமிழ் இலக்கியங்களில் உள்ள விழுமியங்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். தமிழ்ப் படித்த்தற்காகப் பெருமைப் பட வேண்டும். மலேயாவில் தமிழ் படித்த்தால் பல்வேறு நிலைகளில் சிறப்புடன் இருப்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன். மலேயாவில் தமிழ் படித்ததால் மூன்று மொழிகளில் புல்மை பெறும் வாய்ப்புக் கிடைக்கிறது. உலக அரங்கில் தமிழ் மொழி பன்முக நிலையில் வளர்ச்சி பெற்று வருகிறது. மலேயாவில் இணையத் தமிழ் பெருமைக்குரிய நிலையில் தமிழ் இணைய மாநாடுகளை நட்த்தித் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்து வருகிறது. இத்தகைய வளர்ச்சியினை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் பயன்பாட்டுத் தமிழ் மொழியாக்க் கொண்டுள்ளமை பெரிதும் பெருமைக்குரியது என்று குறிப்பிட்டார்..