செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

திங்கள், 7 ஜூலை, 2014

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் சங்க நல்லிணக்க அமைப்பு

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் சங்க நல்லிணக்க அமைப்பு மற்றும் முதலாண்டு
மாணவர்கட்கான வரவேற்பு மற்றும் அறிமுக விழா


வியாழன், 6 பிப்ரவரி, 2014

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் தினவிழாக் கொண்டாட்டம்

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க் கல்லூரியில்  தினவிழாக் கொண்டாட்டம்

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

blood donation camp

blood donation camp

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் பயிலரங்கு

செவ்வாய், 21 ஜனவரி, 2014

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் பயிலரங்கு



மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் சங்கப் பெண் கவிஞர்களின் கருத்துப்புலப்பாட்டு நெறி - பயிலரங்கம் - நிகழ்வுகள்
தகவல் அறிவிப்புச் செய்திகள்

     
 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனம். இஃது உலகளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப்பெற்றுள்ள உயராய்வு நிறுவனமாகும். இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் இயங்கிவருகிறது. 
            
   மதுரை செந்தமிழ்க்கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து  சங்கப் பெண் கவிஞர்களின் கருத்துப்புலப்பாட்டு நெறி என்னும் பொருண்மையிலான பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிலரங்கு பத்து நாட்கள் (22-01-2014 முதல் 01-02-2014 வரை) நடைபெறுகிறது. 

  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் மதுரை செந்தமிழ்க்கல்லூரியும் இணைந்து சங்கப் பெண் கவிஞர்களின் கருத்துப்புலப்பாட்டு நெறி என்னும் தலைப்பில் பத்து நாட்கள் (22-01-2014 முதல் 01-02-2014 வரை)  நட்த்தும் பயிலரங்கின் துவக்க விழா. 22-01-2014 புதன் கிழமையன்று காலை 10 மணிக்கு செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

 செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்துத் தொடங்கி வைக்கிறார்கள். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை,எம்.ஏ.,எம்ஃபில்.> அவர்களும், செந்தமிழ்க் கல்லூரித் தலைவர் திருமிகு.சு.வீரணசாமி அவர்களும் முன்னிலை வகிக்கிறார்கள். 

செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்(பொ), முனைவர் மு.மீனா வரவேற்புரை வழங்குகிறார்; மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் திருமிகு க.முத்தையா பசும்பொன் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார். கோயம்புத்தூர் தூர்தர்ஷ்ன் கேந்திரா இயக்குநர், கவிஞர், கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார். செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாகக் கலந்து கொள்கிறார்கள். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.நந்தினி நன்றியுரை வழங்க உள்ளார்.

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் பொங்கல் விழா

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் பொங்கல் விழா

          மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் பொங்கல் விழாக் கொண்டாடப் பட்டது. தமிழரின் பாரம்பரிய முறையில் மாணவ், மாணவியர்கள் தமிழர் தினமாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடினர்.