செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வியாழன், 22 மார்ச், 2012

செந்தமிழ்க்கல்லூரியில் சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வுக் கருத்தரங்கு

 மாமதுரையில் பெருமைமிகு
செந்தமிழ்க்கல்லூரி மாணவர்களுக்குச் சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வுக் கருத்தரங்க அழைப்பிதழ்

       மதுரை மாநகர் போக்குவரத்துத் திட்டப்பிரிவும் மற்றும் மதுரை செந்தமிழ்க் கல்லூரியும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்குச் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வுக் கருத்தரங்கினை 30.01.2012 அன்று நடத்தின. இக்கருத்தரங்கில் மதுரை செந்தமிழ்க் கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா எம்.ஏ.>பிஎச்.டி.> அவர்;கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் திருமிகு இரா.குருசாமி பி..ஏ.>அவர்கள் கருத்தரங்கத் தலைமை உரையாற்றினார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.>எம்ஃபில்.> அவர்;கள் முன்னிலை வகித்தார்கள்.
மதுரை மாநகர் சாலைப் போக்குவரத்துத் திட்டப்பிரிவுச் சார்பு ஆய்வாளர் திரு.செல்லத்துரை அவர்களும் மதுரை மாநகர் சாலைப் போக்குவரத்துத் திட்டப்பிரிவு தலைமைக்காவலர் திரு இராஜசேகரன் அவர்களும் சாலைப் போக்குவரத்து விதிகள் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்கள். இன்றைய நாளில் மாணவர்கள் கட்டாயம் சாலைப் போக்குவரத்து விதிகளை அறிந்திருக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தினார்கள்.
      அன்றாட வாழ்வில் மாணவ மாணவியர்கள் கற்றறிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கைக் கல்விகளில் ஒன்றாகச் சாலைப் போக்குவரத்து விதிகள் உள்ளன, இதனை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறி இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவர்க்கும் மற்றும் கருத்துரை வழங்கிய மதுரை மாநகர் போக்குவரத்துத் திட்டப் பிரிவினர்க்கும்  செந்தமிழ்க்கல்லூரி முதல்வ்ர் (பொ) முனைவர் மு.மீனா எம்.ஏ.,எம்ஃபில்.,பிஎச்.டி., அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக